தேசிய அளவில் டாப் 10 கல்லூரிகளின் பட்டியலில் கோவை கல்லூரி!

கோவை: NIRF தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது NIRF (National Institutional Ranking Framework)

Advertisement

பல்வேறு படிநிலைகளின் கீழ் ஆய்வு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

NIRF தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 9வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் கோவையில் உள்ள PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளின் இந்த இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த கல்லூரியின் Chair Person நந்தினி ரங்கராஜ், இந்த தருணம் எங்களுக்கு பெருமைமிகு தருணம் என்றும் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து தான் இதனை பெறுவதற்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த Principal, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாங்கள் முன்னேறி உள்ளதாகவும் கடந்த ஆறு ஆண்டுகளாக முதல் 10 இடங்களுக்குள் வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

இது கல்லூரியில் அனைவரும் இணைந்து பணியாற்றியதால் கிடைத்தது என தெரிவித்தார். இதற்கு எங்களுடைய பாடத்திட்டமும் முக்கிய பங்கு என்றும் எங்களுடைய பாடத்திட்டங்கள் அனைத்தும் தொழில் துறையுடன் இணைந்து இருப்பதால் மாணவிகளின் கல்விக்கு பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பெண்கள் Empower தான் எங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவித்தார். மேலும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருப்பதால் எங்கள் மாணவிகளும் அங்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கல்வி பற்றி தெரிந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...