கோவை: சாலையை சரிவர சீர் செய்யாததால் சூயஸ் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காந்திபுரம், நஞ்சப்பா சாலையில், நேற்று முன்தினம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு சாலையினை சரிவர சீர் செய்யாததால் புகார் எழுந்தது. இதையடுத்து சூயஸ் நிறுவனம் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை கண்காணிக்க தவறிய திட்ட மேலாண்மை ஆலோசகருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட தூய்மைப் பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப் பதிவேடுகள், தூய்மைப்பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து ராம்நகர், காளிதாஸ் சாலை பகுதிகளில் குப்பை பிரித்துச் சேகரிக்கும் பணிகளை பார்வையிட்டார். காட்டூர், பட்டேல் சாலை, ராம்நகர் மாரியம்மன் கோவில் வீதி போன்ற இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காட்டூர் V.G. Layout பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் மோகன், உதவி நகர் நல அலுவலர் பூபதி, மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி, சூயஸ் நிறுவனம் அபராதம், கோவை சாலை பணி, தூய்மை ஆய்வு கோவை, கோவை குடிநீர் திட்டம்
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈