NCC செய்தி எதிரொலி: கோவை மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கம்!

கோவை: கோவையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மூடப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாக வீடியோவுடன் NCC செய்தி வெளியிட்ட நிலையில், அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உக்கடம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் சிலர் இரவு நேரங்களில் அதிவேகமாக பயணிப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனால் உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் இரவு நேரங்களில் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

இரவு 11 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து மூடுவதாக அறிவித்தனர். ஆனால், சில தினங்களில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே மேம்பாலங்கள் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டன.

இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனிடையே, News Clouds Coimbatore இந்த பிரச்சனையை மக்கள் பேட்டியுடன் வீடியோ மற்றும் செய்தியாக வெளியிட்டது.

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், பலரும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

இதனிடையே, மேம்பாலங்களில் இரவு நேரத்தில் செல்வதற்கான தடை உத்தரவை நீக்கி, கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

அதே நேரத்தில், அதிவேகமாகச் செல்வோரைக் கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Click Here for: DMK candidates List Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ‘Jungle Jam’ கொண்டாட்டம்; குழந்தைகளே ரெடியா இருங்க!

கோவையில் குழந்தைகளுக்கான ‘Jungle Jam’ நிகழ்ச்சி ஏப்ரல் 17 முதல் ஃபன் ரிபப்ளிக் மாலில் தொடங்கி, கற்றலும் விளையாட்டும் இணைந்த அனுபவத்தை வழங்குகிறது.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...