AIADMK candidates Coimbatore: கோவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! எந்த தொகுதியில் யார் போட்டி?

AIADMK candidates Coimbatore தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோவையில் உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மீதமுள்ள 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

Advertisement

தொண்டமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். மேட்டுப்பாளையம் தொகுதியில் ஓ.கே. சின்னராஜ் போட்டியிடுகிறார்.

சூலூர் தொகுதியில் V.P. கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதியில் P.R.G. அருண்குமார், கோவை தெற்கு தொகுதியில் அம்மன் K. அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதியில் K.R. ஜெயராம்,

Advertisement

கிணத்துக்கடவு தொகுதியில் செ. தாமோதரன், பொள்ளாச்சி தொகுதியில் V. ஜெயராமன் மற்றும் வால்பாறை (தனி) தொகுதியில் D. லட்சுமண சிங் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here for: TVK candidates list Coimbatore

Click Here for: DMK candidates List Coimbatore

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...