Coimbatore Gold Rate: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.
ஜூலை மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராம் ரூ.8,915க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.9,060க்கு விறனை செய்யப்பட்டது.
இதனிடையே தங்கம் இன்று விலை குறைவைச் சந்தித்துள்ளது.
Advertisement

Coimbatore Gold Rate
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,010க்கும், ஒரு பவுன் ரூ.72,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைந்து, இன்று ஒரு கிராம் ரூ.7,435க்கும், ஒரு பவுன் ரூ.59,480க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.