அரசு பேருந்துகளில் சுமை ஏற்றத்தடை; தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி

கோவை: கோவை அரசு பேருந்துகளில் தேர்தல் விதிமுறைக்காக ஆளில்லா சுமை ஏற்றத் தடை அமல்; பயணிகள் பார்சல் மற்றும் கடிதங்களை கண்காணித்து அனுமதி வழங்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அரசு பேருந்துகளில் ஆளில்லாத சுமை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் கிளை மேலாளர்கள், துணை மேலாளர் (வணிகம்), தணிக்கையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Click here to read news 44 வயதில் அனுஷ்காவுக்கு திருமணம்..? Age Shaming செய்வது நியாயமா!

சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பேருந்துகளில் ஆளில்லா சுமை, கடிதம் அனுப்ப அனுமதி அளிக்க கூடாது.

மேலும் பயணிகள் கொண்டு வரும் சுமைகள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள்தான் எடுத்து செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்த பின்னரே பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆளில்லா சுமை, பார்சல்கள்,கடிதங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. ஆய்வின் போது இது கண்டறியப்பட்டால் டிரைவர், கண்டக்டர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Click here to read news கோவையில் குப்பை வண்டி வரும்போது விசில் ஊத எதிர்ப்பு!

மேலும் விதி மீறி செயல்பட்டு காவல் துறை, சுங்க வரித்துறையினரால் வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் டிரைவர், கண்டர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் குப்பை வண்டி வரும்போது விசில் ஊத எதிர்ப்பு!

தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவையில் குப்பை சேகரிப்பில் பயன்படுத்தப்படும் விசில் நடைமுறையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.