கோவையில் குப்பை வண்டி வரும்போது விசில் ஊத எதிர்ப்பு!

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள நிலையில், கோவையில் குப்பை சேகரிப்பில் விசில் பயன்படுத்தும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் களம் காணும் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கி உள்ளது.

Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

இதனால் தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது தொண்டர்கள் கூட்டங்களில் விசில் ஊதி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கோவையில் நடந்த அரசு விழாவில், மாணவி ஒருவர் விசில் ஊதி நடனம் ஆடினார்.

Advertisement

இதனை அரசு அதிகாரிகள் பிடுங்கினர். தவெக-வினர் விசில் ஊதுவதை கிண்டலடிக்கும் வகையில், வீட்டுக்கு வீடு குப்பை வாங்க ஆள் வந்து விட்டார்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.

இந்நிலையில், கோவையில் விசில் ஊதி குப்பை பெறும் நடைமுறையை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பை பெறும் தூய்மைப்பணியாளர்கள் விசில் ஊதி தெரியப்படுத்தி வீட்டுக்கு, வீடு குப்பை பெறுவது நடைமுறையாக உள்ளது.

மேலும் மாநகர பகுதி வீதிகளில் தெரு பைப்களில் தண்ணீர் விடும்போது, அதனை தெரியப்படுத்தும் விதமாக ஊழியர்கள் விசில் அடிக்கின்றனர்.

Click here to read news அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை மாத்திரைகள்!

இந்த நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், விசில் இன்னொரு இயக்கத்தின் தேர்தல் சின்னமாக உள்ளது.

கோவையில் ஆங்காங்கே உள்ள பேனர், போஸ்டர், சுவர் எழுத்துகள், விளம்பரம் அனைத்தையும் அழித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல், விசில் ஊதி குப்பை பெறுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக குப்பை பெற ஊழியர்கள் வருவதை ஒலி பெருக்கி மூலமாக தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.