ஒண்டிப்புதூர் பகுதியில் புதிய மதுபான கடை- அதிமுக எம்.எல்.ஏ உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து எதிர்ப்பு…

கோவை: ஒண்டிப்புதூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுபான கடையை எதிர்த்து எம் எல் ஏ ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்து நெசவாளர் காலனி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே ஆர் ஜெயராமன் தலைமையில் பாஜக ,தமிழக வெற்றி கழகம் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி ஒண்டிபதூர் பட்டணம் மெயின்ரோட்டில் அரசு மகளிர் விடுதி, பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக திடீரென லைசென்ஸ் இல்லாமல் 11to11 மதுபானக் கடை திறக்கப்பட உள்ளது.

அதனை எதிர்த்து அதிமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம தலைமையில் அதிமுக தொண்டர்கள் அதிமுக மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள்
மற்றும் பாஜக தவெக மற்றும் பொதுமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து கடுமையான எதிர்பு கோஷங்கள் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர்.

அந்தப் பகுதியில் மதுபான கடை வந்தால் பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என்றும் அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் எனவும் வலியுறுத்திய அவர்கள் அந்த மதுபான கடை வராமல் அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் ஏற்பட்டு விட்டது- கோவையில் செங்கோட்டையன் விமர்சனம்…

கோவை: எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் ஏற்பட்டு விட்டது என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்...

Video

Join WhatsApp