கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு துவக்கம்…

கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில் அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை வடகோவை பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடி நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.

Advertisement

கோவையில் 11 லட்சத்து 22 ஆயிரத்து 290 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 1540 நியாய விலை கடைகளில் 336.68 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், செவிலியர்கள் இன்று மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...