கோவை: கோவை, திருப்பூர் வழியாக ஹைதராபாத் வரை இயக்கப்படும் ஹைதராபாத்-கொல்லம் சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:
போக்குவரத்து அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement

வண்டி எண் 07193 ஹைதராபாத்-கொல்லம்; வரும் ஜூலை 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை (ஒவ்வொரு சனிக்கிழமையும்) ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.10 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 7.10 மணிக்குக் கொல்லம் ரயில் நிலையத்தை அடையும்.
வண்டி எண் 07194 கொல்லம் – ஹைதராபாத்; ஜூலை 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் ரயில் நிலையத்தை அடையும்.
முக்கிய நிறுத்தங்கள் மற்றும் நேரம்:-
ஹைதராபாத்-கொல்லம் ரயில்
- ஜோலார் பேட்டை: மாலை 5.55 / 6.00
- சேலம்: மாலை 7.22 / 7.25
- ஈரோடு: இரவு 8.20 / 8.30
- திருப்பூர்: இரவு 9.13 / 9.15
- போத்தனூர்: இரவு 11.00 / 11.02
கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈
கொல்லம்-ஹைதராபாத் ரயில்
Advertisement

- போத்தனூர்: மாலை 6.20 / 6.22
- திருப்பூர்: மாலை 7.18 / 7.20
- ஈரோடு: இரவு 8.20 / 8.30
- சேலம்: இரவு 9.27 / 9.30
- ஜோலார் பேட்டை: இரவு 11.55 / 12.05
இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.