கோவை: கோவையில் லிப்ட் வயர் அறுந்து விழுந்த விபத்தில் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பணக்கார வீதியை அடுத்த ரங்கே கவுண்டர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை சாமான் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் லிப்ட் உள்ள நிலையில், ஊழியர் சுரேஷ்குமார் என்பவர் லிப்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் வயர் அறுந்து விழுந்தது.
இதில் சுரேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடை வீதி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் லிப்ட் வயர் அறுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.