Coimbatore weather report: 6 நாட்களுக்கான கோவை வானிலை முன்னறிவிப்பு!

Coimbatore weather report: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நாட்கள் வாரியாக வானிலை முன்னறிவிப்பை இந்த தொகுப்பில் காணலாம்:-

Advertisement

வியாழக்கிழமை கோவையில் பகுதியளவில் மேகமூட்டம் நிலவும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை 22°C – 32°C வரை இருக்கும்.

வெள்ளிக்கிழமை கோவையில் பகுதியளவில் மேகமூட்டம் தொடரும். இடியுடன் கூடிய லேசான/மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் 21°C, அதிகபட்சம் 32°C வெப்பநிலை இருக்கும்.

சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதமான வானிலை இருக்கும். வெப்பநிலை 20°C – 33°C வரை பதிவாக வாய்ப்பு.

ஞாயிற்றுக்கிழமை கோவையில் லேசான மழை தொடரும். வெப்பநிலை 20°C முதல் 33°C வரை இருக்கலாம்.

திங்கட்கிழமை கோவையில் பெரும்பாலும் பகுதியளவில் மேகமூட்டமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவு. ஈரப்பதமான வானிலை இருக்கும். வெப்பநிலை 20°C – 33°C வரை பதிவாகலாம்.

செவ்வாய்க்கிழமை கோவையில் பகுதியளவில் மேகமூட்டமான வானம் நிலவும். மழை வாய்ப்பு குறைவு. வெப்பநிலை குறைந்தபட்சம் 19°C, அதிகபட்சம் 33°C இருக்கும்.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை. புதிய அப்டேட்டுகள் வெளியாகையில் அது நமது தளத்தில் வெளியிடப்படும். இணைந்திருங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு…

கோவையில் வாக்கு எண்ணிக்கை நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...