Coimbatore weather: கோவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
Coimbatore weather
அதன்படி இன்று கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், காஞ்சி, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

