கோவை: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குறைந்தபட்ச வெப்ப நிலை 17 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் பதிவாகி வந்தது. இதனால் மாவட்டத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவி வந்தது.
இதனிடையே இந்த வாரம் கோவையில் பதிவாகும் குறைந்தபட்ச வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வெப்பம் அதிகரிக்கலாம் என்றும், 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி, நாள் வாரியாக வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்
டிசம்பர் 29 (திங்கள்)
கோவையில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி, குறைந்தபட்சம் 19 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
டிசம்பர் 30 (செவ்வாய்)
செவ்வாய்க்கிழமை வானிலை மாற்றமின்றி தொடரும். பகுதியளவில் மேகமூட்டம் நிலவும். சில பகுதிகளில் லேசான மந்த காற்று காணப்படலாம். வெப்பநிலை 20 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
டிசம்பர் 31 (புதன்)
ஆண்டின் கடைசி நாளான புதன்கிழமை, கோவையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
ஜனவரி 1 (வியாழன்)
புத்தாண்டு தினமான வியாழக்கிழமை கோவையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 30 டிகிரி முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ஜனவரி 2 (வெள்ளி)
வெள்ளிக்கிழமை கோவையில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை தொடரும். லேசான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ்.
ஜனவரி 3 (சனி)
சனிக்கிழமை கோவையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 30 டிகிரி முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அடுத்தடுத்த அப்டேட்டுகளை படிக்க நமது நிய்ஸ் க்ளவுட்ஸ் தளத்துடன் இணைந்திருங்கள் வாசகர்களே…

