Header Top Ad
Header Top Ad

சேரும் சகதியுமாய் மாறிய கோவை அண்ணா காய்கறி மார்க்கெட்- வியாபாரி வேதனை

கோவை: கோவை மாநகராட்சி அண்ணா தினசரி மார்க்கெட் சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் வியாபாரிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

கோவையில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் வியாபாரிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் சாய்பாபா காலனி பகுதியில் இயங்கி வரும் அண்ணா தினசரி மார்க்கெட் முக்கிய மார்க்கெட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மார்க்கெட்டில் பெரும்பாலான பகுதி சேரும் சகதியும் ஆக மாறி உள்ளதால் வியாபாரிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

பல வருடங்களாக இதே நிலைதான் தொடர்ந்து வருவதாகவும் மழை பெய்யும் பொழுதெல்லாம் இது போன்ற சேரும் சகதியும் ஆகுமாறு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்துள்ள வியாபாரிகள் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நிரந்தர தீர்வு காண்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறினர்.

Advertisement

பொதுமக்களும் இதனால் காய்கறிகளை வாங்குவதற்கு வருவதில்லை என்பதால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Recent News