Header Top Ad
Header Top Ad

விஜய் பிரச்சாரத்திற்கு வாழ்த்துகள்- ஆனால் எங்களுக்கு பாதிப்பு இல்லை- கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை: விஜயின் பிரச்சாரத்திற்கு வாழ்த்துகள் கூறினார் தொல்.திருமாவளவன்.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த அவர், இன்று பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள், இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகிறது என்றார்.
விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது என கூறிய அவர் கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும் ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன் என்றார்.

Advertisement


அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் என தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை என்றார்.

எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள் அணியாக சந்திப்பதற்கு வாய்ப்பில்லை என்றார். பாஜக அதிமுக பிரிந்தால் திமுகவில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை என்றார்.

அண்ணாமலை பாஜக கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார் என்றும் நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது என்றார்.
அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை விரும்பியதைப் போலவே நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்குவது போன்று தான் எனக்கு தோன்றுகிறது என்றார்.

Recent News