கோவை: கோவை நோக்கி வந்த எலெக்ட்ரிக் பேருந்து திடீரென எரிந்த விபத்தில் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து தனியார் நேற்று இரவு எலெக்ட்ரிக் பேருந்து ஒன்று பயணிகள் 18 பேருடன் புறப்பட்டு கோவை நோக்கி வந்தது.
இந்த பேருந்து இன்று அதிகாலை கருமத்தம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடரில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்து காரணமாக பேருந்தின் முன்பக்கத்தில் தீ பற்றியது. சிறுதி நேரத்திலேயே தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.
கருகிய பேருந்து
இந்த விபத்தில் சுதாரித்துக்கொண்ட பயணிகள் அனைவரும் உடனடியாக அதிலிருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே பேருந்து முழுவதும் தீயில் கருகியது.

சிலர் பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
எலெக்ட்ரிக் பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.