கூட்டணி குறித்த அறிவிப்பு- கோவையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்த தகவல்!!!

கோவை: தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் !!!

கோவையில் கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, கட்சி ஆலோசனைக் கூட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது :-

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை வந்து இருப்பதாகவும், அதேபோல தே.மு.தி.க வின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

நிர்வாகிகள் சந்திப்பு, உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கோவைகள் முடித்து விட்டு இரவு கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்ல இருப்பதாகவும், நாளை கிருஷ்ணகிரியில மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கூறினார்.

கட்டாய கல்வி குறித்த கேள்விக்கு,

அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டும், படித்தால் மட்டும் தான் எதிர்காலம் பிரகாசமாக சொந்தக்காலில் நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தே.மு.தி.க வின் விருப்பம் என்றார்.

காங்கிரஸ் கட்சி சார்பான விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது தொடர்பான கேள்விக்கு,

பல ஆண்டு காலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடாக சுதீஷ் விழாவில் கலந்து கொண்டார் என்றும், இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், இதற்கும் கூட்டணிக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தே.மு.தி.க வின் தேர்தல் நிலைப்பாடு குறித்தான கேள்விக்கு

எங்களுடைய நிலைப்பாடு தற்போதைக்கு எட்டு மண்டலமாக பிரிந்து தமிழ்நாடு முழுக்க, எட்டு மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை அமைத்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், முதலில் அதை சீராக செய்து கொண்டு உள்ளதாகவும், ஒரு மாதம் கழித்து தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் இருக்கிறது எனவும், கட்சியின் வளர்ச்சியை மட்டுமே நாங்கள் உற்று நோக்குகிறோம் என்றும் கூறினார்.

கடலூரில் ஜனவரி 9 ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இன்றைய தினம் நிலைப்பாடு கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி யாருடைய தலைமையில் என்பது குறித்தான கேள்விக்கு,

தமிழ்நாட்டுக்கு தமிழக கட்சிகளின் உடைய ஆட்சி இருந்தால், நன்றாக இருக்கும் என்று கூறினார்.

கூட்டணி கட்சி என்று வந்தால் வரவேற்க கூடிய ஒன்று தான். யார் ? வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்கலாம். எத்தனையோ ? மாநிலங்களில் அது சாத்தியமாக இருக்கிறது என்று கூறினார்.

ஸ்ரீகாந்த் குறித்த கேள்விக்கு,

இதை அவர்கள் மட்டுமே பயன்படுத்தியதாக எடுத்துச் கொள்ள கூடாது, தமிழகமே போதை வஸ்துக்களால் மூழ்கி இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாத விஷயம். அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும். இந்த அரசு போதை இல்லா, டாஸ்மாக் இல்லா, கள்ளச் சாராயம் இல்லா ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சி எப்படி ? இருக்கிறது என்று கேள்விக்கு,

தி.மு.க ஆட்சியில், இன்று நான் கோவையில் இருப்பதால் முதலில் இங்கு இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அனைத்து சாலைகளுமே குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று உயிர்களை இழந்து கொண்டு இருக்கிறோம். மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தொய்வாக நடந்து கொண்டு இருக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். குப்பை தரம் பிரிக்கும் இடம், என சொல்லி மக்களால் பெரிய போராட்டம் நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. பாதாள சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. கோயம்புத்தூர் என்றாலே ஒரு கிளீன் சீட்டி என்று நான் கேப்டன் காலத்தில் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறி உள்ளது. இது மிகவும் வருந்தக் கூடிய விஷயமாக உள்ளது.

இதற்கு அரசு நிச்சயம் தீர்வு காண வேண்டும் என்பதையும் தான் வலியுறுத்துகிறேன் என்றும், கூறினார்.

விஜய் பற்றிய கேள்விக்கு,

நான் அவருக்கு அறிவுரை கூற வேண்டிய வயது அவருக்கு இல்லை, அவருக்கான முடிவை அவர் தான் எடுக்க வேண்டும் என்று கூறினார். அதே போல மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...