Header Top Ad
Header Top Ad

கோவையில் மின் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்- காரணம் என்ன?

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) சார்பில் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்ள்ளபட்டது.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (CITU) 30க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மின்சார வாரியத்தில் பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF பிடித்தம் செய்ய வேண்டும், பகுதிநேர ஒப்பந்த ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பப்பட்டது.

Advertisement

தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Recent News