கோவை: கோவையில் நடைபெற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் திமுக அரசையும் திமுக அமைச்சர்களையும் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொண்டாமுத்தூர் குனியமுத்தூர் சுந்தராபுரம் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் மக்களிடையே உரையாற்றினார். முன்னதாக உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.

இந்த பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் 139 சட்டமன்ற தொகுதியில், நான் நேரடியாக சென்று மக்களை சந்தித்து விட்டு, நோட்டு 140 சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் பகுதிகளில், உங்களை சந்திக்கின்ற பாக்கியத்தை நான் பெற்று இருக்கிறேன். இந்த எழுச்சி பயணத்தில் அதிக மக்கள் கூடிய பகுதி தொண்டாமுத்தூர் பகுதி தான்.
தொண்டாமுத்தூர் பகுதி அண்ணா திமுக வின் கோட்டை. மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மக்களை சந்திக்க வேண்டிய நிலை இன்று இருந்தது.
ஸ்டாலின் குறிப்பிடுகிறார், திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தல், 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார். எப்பொழுதும் அவர் பேசுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வலுவான கூட்டணி என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அவர்களே சற்று தொண்டாமுத்தூர் தொகுதியை சற்று தொலைக்காட்சியின் வாயிலாக பாருங்கள்… அடுத்த தேர்தலில் அதிமுக இந்த பகுதிகள் வெற்றி பெறுவது இங்கு கூடி இருக்கும் மக்களே சாட்சியாக உள்ளனர். உங்களுக்கு கூட்டணி பலமாக இருக்கலாம், ஆனால் மக்களுடைய பலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் உள்ளது.
அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்த உடனேயே, திரு ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்து விட்டார். சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசும்போது, திடீரென எழுந்து என்னை நோக்கி நீங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து விட்டீர்களே என பேசினார்.. நான் ஒரு நிமிடம் யோசித்தேன், நாம் கூட்டணி வைத்ததற்கு இவர் ஏன் புலம்புகிறார் என்று… அந்த அளவுக்கு மனதில் பயத்தோடு இருக்கிறார்கள். ஒரு சட்டமன்றத்தில் நம்முடைய கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை. ஆனால் நம்மை பார்த்து ஸ்டாலின் புலம்பியது தோல்வியின் பயத்தால்தான்.
2026- ல், அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாரதிய ஜனதா மத்தியிலும் அவர்கள் சிறந்த முறையில் ஆட்சி செய்து மூன்றாவது முறையாகவும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து உள்ளனர். தமிழகத்திலும் அ.தி.மு.க 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்து இருக்கிறது, அதனால் தான் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடிந்து இருக்கிறது. அந்தளவுக்கு மத்தியில் இணக்கத்தோடு செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தை இந்த தொண்டாமுத்தூர் பகுதியில் இந்த தி.மு.க நிறைவேற்றி இருக்கிறதா?
அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி இருக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்குகின்ற நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வந்து இந்த திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டார்கள். அதிமுக ஆட்சி அமைந்த உடன், அத்திக்கடவு அவிநாசி இரண்டாம் கட்டத்திட்டம், நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும். விவசாயிகளுக்கும் குடிநீருக்கும் தேவையான தண்ணீர், தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்யப்படும். அதிமுக ஆட்சி இருந்த பொழுது தான் குடிமராமரத்து திட்டத்தை கொண்டு வந்தது. அப்பொழுது தான் இந்த பகுதியில் இருந்த ஏரிகள் குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டது.
அப்பொழுது மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட்டது.
அதேபோல அதில் அல்ல கூடிய வண்டல் மண்டலை விவசாயிகள் நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். அதனால் நல்ல விளைச்சல் கிடைக்கப்பெற்றது.

தற்போது பல விவசாயிகள் மீது வழக்கு போடப்பட்டு இருப்பதாக வேலுமணி எடுத்துக் கூறினார், அவரவரின் நிலத்தில் இருக்கும் மண்ணை எடுத்து பயன்படுத்தினால் கூட, இந்த திமுக அரசு அவர்கள் மேல் வழக்கு போட்டது மட்டுமல்லாமல், நிறைய அபராத தொகைகளை விதித்து இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இதையெல்லாம் உரிய முறையில் பரிசீலனை செய்து, வண்டல் மண் அவரவர் நிலங்களில் குளங்களில் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கப்படும். நாங்கள் அனுமதி கொடுத்த பொழுது அவரவரின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருந்தனர் விவசாயிகள். ஆனால் இந்த அரசு அந்த மண்ணை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை அடிக்கிறது.
ஒரு அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும். திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்வதுதான் அவர்களுடைய தலையாக கடமையாக உள்ளது. இன்றைக்கு அல்ல திரு கருணாநிதி காலத்தில் இருந்தே இதே வேலையாக தான் இருக்கிறார்கள். தி.மு.க ஊழல் கட்சியாக தான் மக்களிடம் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், ஆனால் தமிழ்நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் தி.மு.க தான். இன்றைய தினம் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறையே இல்லை. மக்களுக்கு ஏதாவது தேவை என்று சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று அந்த அதிகாரிகளை சந்தித்து கேட்டால், மேல் இடத்திற்கு கொடுக்க வேண்டும் கொடுப்பதை கொடுத்தால் தான் வேலை நடக்கும் என கூறுகிறார்கள்.
பத்திரப் பதிவு செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட கமிஷன் தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கொடுக்க வேண்டும். நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு சென்று சிருந்தேன். அங்கு சில விவசாயிகள் என்னை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்து இருந்தன, அந்த பகுதியில் புளி விவசாயம் மிகவும் அதிகம். விவசாயிகள் எங்களுக்கு விலை வீழ்ச்சிகள் ஏற்பட்டு விட்டது, உங்கள் ஆட்சி ஏற்பட்டாலோ அல்லது இந்த அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லியோ, எங்களுக்கு நியாயமான விலையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த அமைச்சர்கள் எல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகின்றனர். ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு யார் அந்த சார் அமைச்சரே, புளியல் இருந்து எப்படி ? புளியங்கொட்டை எடுக்கப் போகிறார் என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
வேண்டுமென்றே விவசாயிகளை அசிங்கப்படுத்துகிற தி.மு.க ஆட்சிக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்..
அதேபோல மா. சுப்பிரமணியன் துறையில் நிறைய முறைகேடுகள் இருக்கிறது. திருட்டில் நகை திருட்டு பணம் திருட்டு என வகை வகையான திருட்டுக்கள் உள்ளது, ஆனால் கிட்னி திருட்டை பார்த்து இருக்கிறீர்களா?
அப்படி கிட்னியை கூட திருடுகிற ஆட்சி தி.மு.க ஆட்சி தான். தி.மு.க., எம்.எல்.ஏ வுக்கு சொந்தமான மருத்துவமனை, திருச்சியில் உள்ளது. அதேபோல பெரம்பலூரில் ஒரு மருத்துவமனை உள்ளது. இதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சம்பந்தப்பட்டு இருக்கிறார், இது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு குழு அமைக்கப்பட்டு நேரடியாக சென்று இந்த முறைகேட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதுவரை ஆனால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. அதனால் மா சுப்பிரமணியன் முதலில் அந்த கிட்னி திருட்டை கண்டுபிடிக்க வேண்டும். யாரும் தி.மு.க காரர்கள் நடத்தும் மருத்துவமனையின் பக்கம் சென்று விடாதீர்கள். அப்படியே யாரேனும் இதற்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்து இருந்தால் ஒரு நல்ல ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். நம்மளுடைய உறுப்புகள் எல்லாம் உடலில் இருக்கிறதா ? என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது கரும்புக் காட்டிற்கு உள்ளே காங்கிரீட் ரோடு போட்டு வந்தவர்தான் இன்று முதல்வராக இருக்கிறார். தூத்துக்குடிக்கு சென்று பதநீர் சாப்பிட்ட போது இதில் சர்க்கரை போட்டார்கள் என்று கேட்டார். இதுபோன்று விவசாயம் என்ன என்பதே தெரியாத ஒரு முதல்வரை வைத்துக் கொண்டு எங்களை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
அ.தி.மு.க., பா.ஜ.க வலிமையான கூட்டணி அமைத்துக் கொண்டதால் அவர்கள் அவதூறு பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் தான் நிறைய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது, அரசு பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக, 7.5 சவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்டது.
மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலர்ந்தவுடன் லேப்டாப் கொடுக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். தமிழகத்தில் 6000 மதுக்கடைகள் உள்ளது. பெரும்பாலும் மதுக்கடையில் இருக்கும் பார்ர்களையெல்லாம் நீங்கள் சொல்லும் செந்தில் பாலாஜி எடுத்துக் கொண்டார். மதுபான கடையில் ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக கொடுத்தால் மட்டும் தான் பாட்டில் கிடைக்கும். ஒரு நாளைக்கு 15 கோடி தி.மு.க மேல் இடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. வருடத்திற்கு 5,400 கோடி சென்று கொண்டு இருக்கிறது. 4 வருடத்திற்கு 22,000 கோடி கொள்ளை அடித்த அரசாங்கம் தி.மு.க ஆட்சி தான். அ.தி.மு.க ஆட்சி அமைந்த இடம் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன், தீபாவளி பண்டிகைக்கு தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். தி.மு.க ஆட்சியில் அம்மா உணவகம் திட்டமிட்டு முறியடிக்கப்பட்டது.. அ.தி.மு.க ஆட்சியில் வந்ததும் மீண்டும் முழு முயற்சியில் அது செயல்படுத்தப்படும், தரமான உணவு மக்களுக்கு வழங்கப்படும். அதே போல கடுமையான மின் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.
வீட்டு வரி குடிநீர் வரி குப்பை வரி போன்றவற்றிற்கு வரி விதித்து இருக்கும் அரசாங்கம் தி.மு.க தான். ஏழை மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார்.. ஆனால் மீண்டும் அது 4,000 மினி கிளினிக்குகளாக திறக்கப்படும்.. அதேபோல வனவிலங்குகள் இங்கு தோட்டப் பகுதிகளுக்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி உயிர்க்காவும் வாங்குகிறது.
இதற்கும் அண்ணா தி.மு.க ஆட்சி மலர்ந்தவுடன், யானைகள் ஊர் பகுதிக்குள் நுழையாமல் இருக்கும் படி நிச்சயம் நடவடிக்கை எடுத்துக் கொடுக்கப்படும் என்பதை இந்நேரத்தில் தெரிவிக்கிறேன்.
தொண்டாமுத்தூர் பகுதியில் 130 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது, 50 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று பேரூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது..
நூறு கோடி மதிப்பீட்டில் தொகுதி முழுவதும் சாலைகள் போடப்பட்டது. தொண்டாமுத்தூரில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டது.
பேரூர் ஆற்றங்கரையில் தர்ப்பணம் மண்டபம் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆலந்துறையில் மின் மயானம் அமைக்கப்பட்டது போன்று நிறைய திட்டங்கள் தொண்டாமுத்தூர் பகுதிக்கு அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், சிப்காட் தொழிற்பேட்டை, என பல்வேறு கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள் நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று கூறினார்.