கோவை: கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜமாப் இசைக்கு நடனமாடிய முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது…
கோவை அடுத்த கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகிகள் அவருக்கு பூர்ண கும்பம் மரியாதையுடன் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்..
மேலும் கோயில் வளாகத்தில் ஜமாப் குழுவினருடன் இணைந்து ஜமாப் இசைக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில்
கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.