கோவையில் நள்ளிரவில் அடுத்தடுத்து வெடித்த கேஸ் சிலிண்டர்கள்! – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் உள்ள பாத்திரக்கடையில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

சங்கனூர் சாலையில் பாத்திரக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை நேற்றிரவு வழக்கம் போல் பணியாளர்கள் பூட்டிச் சென்றனர்.

சுமார் 11 மணிக்கு மேல், கடையில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.

பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பாகவே கடையில் இருந்த பொருட்கள் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கின.

Advertisement

இந்த தீ விபத்தின் போது கடையில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிறு சிறு கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிக்கத்தொடங்கின. இதனிடையே அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நள்ளிரவில் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.