கோவை: தங்கம் விலை நடப்பு ஆண்டில் மட்டும் பவுனுக்கு ரூ.28,400 உயர்ந்துள்ளது.
கோவையில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,150க்கும். ஒரு பவுன் ரூ.57,200க்கும் விற்பனையாகி வந்தது.
அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை, இந்தியா மீதான அமெரிக்காவின் அதிகபட்ச வரி விதிப்பைத் தொடர்ந்து தாறுமாறாக உயரத் தொடங்கியது.
வரி உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.480 விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.10,700க்கும், ஒரு பவுன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் தங்கம் நடப்பண்டில் மட்டும் பவுனுக்கு ரூ.28,400 உயர்ந்துள்ளது.
இன்று 18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.400 விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,860க்கும், ஒரு பவுன் ரூ.70,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராம் ரூ.160க்கும், கிலோ ரூ.1,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.