Gold Rate Today: வரலாற்றில் இதுவரை இல்லாத விலையில் தங்கமும், வெள்ளியும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு, இந்தியர்களின் குடும்பங்களில் தங்கம் அங்கம் வகிக்கிறது.
தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை கடந்த வாரம் சற்றே விலை குறைந்தது. தொடர்ந்து மீண்டும் இந்த வாரம் விலை உயர்வைச் சந்தித்து வருகிறது.
இதனிடையே புதிய வரலாறு படைக்கும் விதமாக தங்கம் இன்று உச்சபட்ச விலையில் விற்பனையாகிறது.
Gold Rate Today
கோவையில் இன்று ஆபரணத் தங்கம் (22 காரட்), ஒரு பவுனுக்கு ரூ.760 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.9,380க்கும், ஒரு பவுன் ரூ. 75,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கத்தின் புதிய உச்ச விலையாகும்.
18 காரட், ஒரு பவுனுக்கு ரூ.640 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.7,730க்கும், ஒரு பவுன் ரூ.61,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் புதிய வரலாறு படைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.129க்கு விற்பனையாகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1,29,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.