Header Top Ad
Header Top Ad

பேரனுக்கு சாம்பிராணி தயார் செய்த பாட்டி பரிதாப பலி!

கோவை: பேரனுக்கு சாம்பிராணி தயார் செய்த பெண் தீப்படித்து பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.

இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவர் கடந்த 14ம் தேதி தனது பேரனை குளிக்க வைத்து விட்டு சாம்பிராணி காண்பிப்பதற்காக அதனை தயார் செய்தார்.

அதற்காக ஒரு பாத்திரத்தில் கரி துண்டுகளை போட்டு வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். அதில் எதிர்பாராத விதமாக பெட்ரோல் ராஜலட்சுமி மீது விழுந்து தீப்பிடித்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயை அணைத்து ராஜலட்சுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News