கோவை: கோவையில் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் Q பிராஞ்ச் ஆய்வாளராக பணியாற்றும் அதிகாரியின் வாகன ஓட்டுநராக உள்ள தலைமை காவலர் பார்த்திபன். இவர் நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் உணவு அருந்த உணவகம் ஒன்றிற்கு செல்ல கொச்சின் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென அவர்களை தாக்கி, பார்த்திபனை தலை பகுதியில் அரிவாளால் வெட்டி உள்ளனர். தாக்கியவர்கள், பார்த்திபனின் மனைவியிடம் இருந்த தாலி செயின், மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் ஆகியவை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
காயம் அடைந்த பார்த்திபன் முதலில் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை எடுத்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூலூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் காவலர் மற்றும் மனைவியை தாக்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.