கோவையில் சட்டவிரோத குடியேற்றம்; இருவர் கைது!

கோவை: கோவையில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தினர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் அடுத்த தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வங்க தேசத்தை சேர்ந்த 2 பேர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக மாநகர தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று துடியலூர் போலீசார் அந்த நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தில் மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர்.

இவர்களில் 2 பேர் வங்க தேச நாட்டை சேர்ந்தவர்கள் என வந்த புகாரின்பேரில், அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

Advertisement

அவர்களிடம் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த இருவரும் மேற்கு வங்க மாநிலம் வந்து அங்கிருந்து வேலைக்காக கோவை வந்தது தெரியவந்தது.

Advertisement

இதனைத்தொடர்ந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேச நாட்டை சேர்ந்த லோதிப் அலி(29), ஷெரீப்(37) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் வேறு யாரேனும் சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...