உங்க சிரிப்புக்கு நான் அடிமை.. நடிகையிடம் மேடையில் வழிந்த தனுஷ்!

உங்க சிரிப்புக்கு நான் மிகப்பெரிய ஃபேன் என வளர்ந்து வரும் நடிகையை தனுஷ் புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட உலக திரையுலகிலும் தனது நடிப்பால் தடம் பதித்துள்ள உச்சநட்சத்திரம் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இருப்பினும், நெருக்கமானவர்கள் அழைக்கும் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் அல்லது குடும்ப நிகழ்வுகள் என்றால் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி கலந்து கொள்வது தனுஷின் தனிச்சிறப்பாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்கத்தில் உருவாகியுள்ள “யூத்” திரைப்பட விழாவிற்கும் தனுஷ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அழைப்பை பெற்றவுடன் புன்னகையுடன் உடனே ஒப்புக்கொண்ட அவர், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வருகையால் அங்கு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Ken Karunas Youth

விழாவில் பேசும்போது, கருணாஸின் மகன் கென்னுடன் இணைந்து நடித்த “அசுரன்” படத்தின் அனுபவங்களை தனுஷ் நினைவுகூர்ந்தார். அப்போது அசுரன் படத்தின் பிரபல வசனத்தை மேடையில் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அவர், பின்னர் யூத் படத்தின் முதல் போஸ்டரில் கென் மூன்று கதாநாயகிகளுடன் தோன்றியிருப்பதை நகைச்சுவையாக குறிப்பிட்டு கிண்டல் செய்தார்.

மேலும், கென்னை சிறப்பாக வளர்த்ததற்காக நடிகர் கருணாஸை பாராட்டிய தனுஷ், இளம் இயக்குநராக வளர்ந்து வரும் கென்னுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார். படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமாரின் பணியையும் அவர் பாராட்டினார்.

இந்நிலையில், யூத் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள அனிஷ்மா அணில்குமாரைப் பற்றியும் தனுஷ் பேசினார். இவர் முன்னதாக நடித்த “சிறை” திரைப்படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்றிருந்தார். அந்தப் படத்தை பார்த்ததாக கூறிய தனுஷ், “உங்க சிரிப்புக்கு நான் ரசிகன்” என்று மேடையிலேயே உற்சாகமாக தெரிவித்தார். மேலும், உங்கள் முந்தைய படத்தில் உங்கள் அப்பாவித்தனமான முகபாவனைகளும் உணர்ச்சிகளும் படத்திற்கு பெரிய பலமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Dhanush Anishma

அதோடு, சிறை படத்தில் அனிஷ்மாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக மனம் திறந்து பாராட்டிய தனுஷின் வார்த்தைகளை கேட்ட அனிஷ்மா, மேடையிலேயே நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

விஜய் பற்றி கேள்வி..விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த ஷாக் ரியாக்ஷன்!

விஜய் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் விழுந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த பதில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவரது மனைவி பகீர் குற்றச்சாட்டு...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...