மருத்துவமனையில் நடிகை விசித்ரா அனுமதி… என்ன ஆச்சு? பரபரப்பு அறிக்கை!

நடிகை விசித்ரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்து, நாயகியாக நடித்தவர் விசித்ரா. ஆத்மா படத்தில் விளக்கு வைப்போம் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இருப்பினும் சரியான வாய்ப்பு அமையாததால் குணச்சித்திர வேடங்களில், கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். திருமணத்திற்கு பிறகு கணவர், மகன்கள் என செட்டில் ஆன விசித்ரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

Advertisement

சில வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் ராசாத்தி நாடகம் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். ஆனால் கொரோனா காலத்தால் அந்த சீரியல் தடைப்பட்டது. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

அதுவும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அவ்வப்போது, விஜய் டிவியில் ஏதாவது ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டுவது உண்டு. ஆனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

Advertisement

இந்தநிலையில் நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில், மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், வலி ஒரு கணத்திற்கு வாழ்க்கையை நிறுத்திவிடுகிறது; ஆனால் அதே நேரத்தில் மனித மனத்தின் வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு காயமும் உயிர் தப்பித்த ஒரு கதையை தாங்கி நிற்கிறது.

tamil cinema actress Vichithra Admitted in Hospital

@mgmhealthcareindia மருத்துவமனையில் @entdrmohanty மற்றும் அவரது அர்ப்பணிப்பு மிக்க குழுவின் நிபுணத்துவமான பராமரிப்பில் என் அறுவை சிகிச்சை நடைபெற்றதற்கு நான் மனமார்ந்த நன்றியுடன் இருக்கிறேன். அவர்களின் திறமையும் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையும் இந்த குணமடையும் பயணத்தில் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தது.

இந்த முழு செயல்முறையிலும் அன்பு, பொறுமை மற்றும் தொடர்ந்து துணைநின்ற என் அன்புத் துணைவருக்கும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். வலிமையும் கருணையும் கொண்டு உங்களை தாங்கி நிற்கும் மனிதர்கள் அருகில் இருந்தால், குணமடைதல் பயணம் இன்னும் இலகுவாக உணரப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசித்ராவின் பதிவை பார்த்த பலர், அவருக்கு வாழ்த்துக்களையும், ஆறுதலான வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...