கனமழை எதிரொலி- நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்கள்…

கோவை: செல்வ சிந்தாமணி குளத்திலிருந்து வெளியேறும் மழை நீருடன் விஷ ஜந்துக்களும் அடித்து வரப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகளும் மொய்த்து வருவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

கோவை மாநகர் செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குளத்தில் இருந்து வெளியேறிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், செல்வ சிந்தாமணி குளத்தின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழை நீரில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடித்து வரப்படுவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அச்சமடைந்துள்ளனர். மேலும், வீடுகளின் சுற்றுச்சுவர் மற்றும் காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால், இதனால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement

எனவே, செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுவதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதைத் தவிர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பணியாளர்களும் தேங்கி இருக்கும் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க ரூ.75 கோடி திட்டம்!

கோவை மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க ரூ.75 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாலைப் பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...