உலக பேரிடர் குறைப்பு தினம்- கோவையில் ஒத்திகை நிகழ்ச்சி…

கோவை: கோவையில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் தடுப்பு மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

Advertisement

இந்த மாதிரி ஒத்திகையில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவது மற்றும் அவசரகால சூழ்நிலைகளைச் சமாளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மாதிரி ஒத்திகையின் மூலம் விளக்கப்பட்டன.

Advertisement

இந்த நிகழ்ச்சியை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டார். அப்போது, பேரிடர் காலங்களில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் கலந்துகொண்டனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...