Header Top Ad
Header Top Ad

கோவையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு பயிற்சியுடன் ஊதியம்!

கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தில் CNC Operator பணிக்காக ஆட்கள் தேவைப்படுவதாகவும், பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சூலூரை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஜி.டி.என். இன்ஜினியரிங் என்ற பிரபல தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் CNC Operator பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து GTN Engineering நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த பணிக்கான மூன்று முதல் ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ (மெக்கானிக்கல்), மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 23ல் இருந்து 30க்குள் இருக்க வேண்டும்.

Advertisement

ஊதியம்

திறன் அடிப்படையில் ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு
பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, திருமணமான பெண்களுக்கு மூன்று மாத CNC Operator பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி காலத்தில் அவர்களுக்கு ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு நிரந்தர வேலை வழங்கப்படும்.

சலுகைகள்

பணியில் சேரும் நபர்களுக்கு PF, ESI, BONUS, உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

Advertisement

தொடர்புக்கு
📞 99424 84678, 96294 99094

இவ்வாறு GTN Engineering நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பயனுள்ள தகவலை, வேலையை எதிர்நோக்கும் நபர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News