Header Top Ad
Header Top Ad

கரூர் மோசமான சூழலில் உள்ளது- தவெக சம்பவம் குறித்து கோவையில் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: கரூர் மாவட்டம் மோசமான சூழ்நிலையில் உள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட பிரச்சாரத்தின் போது விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரச்சாரம் முடிந்து விஜய் புறப்பட்ட நிலையில் கூட்டநெறிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தடைந்த போது செய்தியாளர்களை சந்திக்காமல் வாடிய முகத்துடன் சேலம் புறப்பட்டார்.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கரூர் சம்பவத்தில் 39 பேர் இறந்ததாக தகவல்கள் வருகின்றன, எங்களுக்கெல்லாம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை என தெரிவித்தார்.

Advertisement

இது மிகவும் வருத்தமான ஒன்று மோசமான துக்கமான சம்பவம் என கூறிய அவர் கரூரில் நடந்த சம்பவம் பற்றி வார்த்தைகளே வரவில்லை என்றார். பிரச்சாரத்திற்கு வரக்கூடிய தலைவர்கள் அந்தக் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் காவல்துறைய சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் இது பற்றி முழுமையான தகவல்கள் தெரிகின்ற பொழுது விரிவாக அது பற்றி பொதுச்செயலாளர் கருத்தை தெரிவிப்பார் என்று கூறியிருக்கிறார் என்றார்.

மிக மோசமான சூழ்நிலையில் கரூர் உள்ளது என தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும் அதிகமான அளவில் வழங்கி அரசு வேலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது போன்ற சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் இதுபோன்ற நடக்கக்கூடாது அதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இது குறித்து உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

Recent News