கோவை: சிங்காநல்லூரில் கே.ஆர். ஜெயராம் ரூ.147 கோடி சொத்து இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் ரூ.50 கோடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்எல்ஏ கே.ஆர். ஜெயராம், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது, ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகள் மற்றும் 3 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறை 2026 தேர்தல் பிரமாண பத்திரத்தில், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 கார்கள் இருப்பதாகவும், ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகள் மற்றும் ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த சொத்து மதிப்பு ரூ.147 கோடியாக பதிவாகியுள்ள நிலையில், கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் ரூ.50 கோடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

