கரூர் தவெக விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்- கோவையில் அஞ்சலி செலுத்திய முற்போக்கு இயக்கங்கள்

கோவை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்து
முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள்னர்.

Advertisement

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தலைவர்களும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட இயக்க பேரவை, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Recent News

Video

Join WhatsApp