பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபர்- கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…

கோவை: பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைதான நபருக்கு 10 வருட சிறை தண்டனை என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணி (43) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் மகளிர்( Mahila Court) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து பாலசுப்பிரமணிக்கு 10 வருட சிறைதண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Advertisement

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் கீதா (WHC 325) என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெகுவாக பாராட்டினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.