மருதமலை கோவில் உண்டியல் திறப்பு- காணிக்கை எவ்வளவு தெரியுமா?

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் பலரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் ஆனது எண்ணப்படுகிறது.

அதன்படி இன்று (07.01.2026) கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ண பெற்றது. அதன்படி ரூபாயாக 94 லட்சத்து 54 ஆயிரத்து 69 ரூபாயும், தங்கமாக 71 கிராம் 90 மில்லி கிராமும் வெள்ளியாக 3 கிலோ 400 கிராமும் பித்தளையாக 12 கிலோ 750 கிராமும் காணிக்கையாக உண்டியலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

உண்டியல் திறப்பு கோவில் தக்கார் ஜெயக்குமார் துணை செயல் அலுவலர், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் மற்றும் பேரூர் சரக ஆய்வர் முன்னிலையில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp