மருதமலை கோவில் உண்டியல் திறப்பு- காணிக்கை எவ்வளவு தெரியுமா?

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர் குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள் பலரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் ஆனது எண்ணப்படுகிறது.

அதன்படி இன்று (07.01.2026) கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ண பெற்றது. அதன்படி ரூபாயாக 94 லட்சத்து 54 ஆயிரத்து 69 ரூபாயும், தங்கமாக 71 கிராம் 90 மில்லி கிராமும் வெள்ளியாக 3 கிலோ 400 கிராமும் பித்தளையாக 12 கிலோ 750 கிராமும் காணிக்கையாக உண்டியலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

Advertisement

உண்டியல் திறப்பு கோவில் தக்கார் ஜெயக்குமார் துணை செயல் அலுவலர், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் மற்றும் பேரூர் சரக ஆய்வர் முன்னிலையில் நடைபெற்றது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில்,உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...