கோவை பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகளில் மாஸ் கிளீனிங்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள், பயணியர் நிழற்குடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக ஒரே நேரத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களுக்குட்பட்ட 100வார்டு பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள், கொசு ஒழிப்பு பணிகள் , மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட இடங்களில் இன்று மாஸ் கிளீனிங் பணிகள் இன்று நடைபெற்றது.

Advertisement

இதில் மாநகராட்சியின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் 900க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், கிருமி நாசினி கொண்டு தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில்,உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...