மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பதற்றம்…

கோவை: பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.

அதிமுக செய்தி தொடர்பாளர் சத்தியன் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவதூறாக பேசியதாகவும், பீகார் தேர்தலில் தமிழக மக்களை கேவலமாக பேசி வரும் பாஜகவினரை கண்டித்தும் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் இன்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தமிழ்புலிகள் கட்சியினர் அதிமுக செய்தி தொடர்பாளர் சத்தியன் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகவும் அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அவரது உருவ பொம்மையையும்

பீகார் தேர்தலில் தமிழக மக்களை கேவலமாக பேசி பிரச்சாரம் மேற்கொள்வதாக பாஜகவினரை கண்டித்து பிரதமர் உருவ பொம்மையையும் எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த போலிசார் அந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அக்கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில் போலிசார் அவர்களை கைது செய்தனர்.

Recent News

கோவையில் திறக்கப்பட்டது இணையத் தொழிலாளர்கள் கூடம்…

கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையிலும் இணைய தொழிலாளர்கள் கூடம் திறக்கப்பட்டது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் கூடத்தை எம்பி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp