கோவையில் நாளை துவங்குகிறது தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி- விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கோவை: இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ எனும் இந்தியாவின் மிகப்பெரும் குதிரை தடை தாண்டும் போட்டியை கோவையில் வரும் ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள அலெக்ஸ்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் கிளப்பில் நடைபெற்றது. இதில் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ் நாடு-வின் தலைவர் .A.S. சக்தி பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்

ஜூலை 4-6 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி-யை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட்’ எனும் தனியார் மைதானத்தில் நடைபெறுகிறது என்றார்.

இதில் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன என்றும்
அனைத்து அணிகளிலும் திறமையான, மிக பெரும் அளவில் சாதனை செய்துள்ள குதிரையேற்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் என்றார்.

நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் 2000 பேர் வரை அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். மொத்தம் 3000 பேர் அங்கு கூடவும் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய வசதிகளும் – தண்ணீர், சிற்றுண்டி, கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியை காணவேண்டி, இலவச டிக்கெட்கள் வழங்கப்படவுள்ளன என்றும் டிக்கெட்களை ticketprix.com. எனும் இணையதளத்தில் பெறலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp