கோவை: அபூர்வமான கிருஷ்ண ஜெயந்தி தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் வீடுகளில் என்னென்ன வாங்க வேண்டும்? எந்த நிற ஆடை அணிய வேண்டும்? என்பது குறித்த சிறு தொகுப்பை தற்போது காணலாம்.
அவதரிப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் அஷ்டமி திதியில், ரோஹிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் அவதரித்த நாளாகும். இந்த நாளை ஹிந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அபூர்வ நாள்
வழக்கமாக வரும் தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தியாகவும், வட இந்தியாவில் ஜென்ம அஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவர்கள். இது வெவ்வேறு நாளாக கொண்டாடப்படும். ஆனால், இந்தாண்டு இவ்விரு பண்டிகைகளும் ஒரே நாளில் வந்திருப்பது, ஆன்மிகவாதிகளால் மிகவும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது.
இந்த நன்னாளில் ஒவ்வொருவரின் வீடுகளின் வாசல்களில் இருந்து சுவாமி பூஜை அறை வரையில் கிருஷ்ணரின் சின்ன சின்னக் காலடி சுவடுகளை அரிசி மாவு கோலம் போடுவார்கள். மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், அவல், பழங்கள் உள்ளிட்ட நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு நடத்துவார்கள்.
நல்ல நேரம்
பொதுவாக கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக நம்பப்படுவதால், மாலை அல்லது இரவு நேரங்களிலேயே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இன்றைய தினம், மாலை 6.15 மணி முதல், இரவு 8.30 மணிக்குள் பூஜை செய்வது மிகவும் விஷேசமானது. அதேபோல, காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரையும், மதியம் 12.15 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை பூஜைக்கு உகந்த நேரமாகும்.

அஷ்டமி திதி நாளை அதிகாலை 2.09 மணிக்கு துவங்கி இரவு 11.46 மணி வரை நீடிக்கிறது. அதேபோல, ரோஹிணி நட்சத்திரம் அதிகாலை 12.57 மணிக்குத் துவங்கி இரவு 11.22 மணி வரை இருக்கும். ரோஹினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் ஒரே நாளில் இணைவதால், இது கிருஷ்ண ஜெயந்திக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆனந்தமும்… ஆன்மீகமும்…
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிந்து கொண்டாடி மகிழ்வார்கள். கிருஷ்ணரின் சின்ன சின்னக் காலடி சுவடுகளை வரைந்து, ‘கோவிந்தா, கோபாலா’ என்று சொல்லி குழந்தைகளை உள்ளே அழைப்பார்கள். இதுபோன்ற எளிய பக்தி நிறைந்த முறைகளை கடைபிடித்து கொண்டாடுவதன் மூலம், வீடுகளில் ஆனந்தமும், ஆன்மீக அமைதியும் பெருகும் என்று ஆன்மீக வட்டாரங்கள நம்புகின்றன.
என்ன படைக்கலாம்
இந்தப் பண்டிகை குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாவது; கிருஷ்ண ஜெயந்தியை பொதுவாக 2 நாட்கள் கொண்டாடுவார்கள். ஆவணி, ரோஹிணி மற்றும் அஷ்டமி. வடமாநிலங்களில் திதியை வைத்து ஜென்ம அஷ்டமி என்று கொண்டாடுவார்கள். பார்த்தசாரதி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் வழிபாடு நடத்துவார்கள். இங்கு, நட்சத்திரத்தை வைத்து கொண்டாடுபவர்கள் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடுவார்கள்.
;ஆண்டு இரண்டுமே ஒரே ஆண்டில் தான் வருகிறது. ஆவணி, ரோஹிணி மற்றும் அஷ்டமி ஒரே நாளில் வருகிறது. இதில் கோகுலாஷ்டமி வந்து கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணர் கோவில்களில் உறியடி மிகவும் விஷேசமாக நடைபெறும். கிருஷ்ணரின் பிறந்த நாளில் பலகார வகைகளில், பிரசாதம் வந்து மிகவும் எளிமையாக பண்ணனும் என்று நினைத்தீர்கள் என்றால், வெண்ணெய் கண்டிப்பாக வையுங்கள். அவல், நவா பழம் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
எனக்கு நிறைய பலகாரங்களை படைத்து வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள், உப்பு சீடை, வெண்ணெய் சீடை,கை முறுக்கு, அதிரஷம், வடை மற்றும் அவல் பாயாசம் பண்ணுவது ரொம்ப விசேஷம். அனைத்து வகையான பழங்களை படைக்கலாம்.
என்ன நிற ஆடை
கிருஷ்ணரின் திரிமேனி நீலம் என்பதால், பொதுவாக நீல நிற ஆடை அணிவார்கள். அதுவும், வெள்ளிக்கிழமை வருவதால், நீலம் மற்றும் வெள்ளி கலந்த ஆடையை அணியலாம். சந்திரன் சுக்ரன் வீட்டில் இருப்பதால், சந்தனம் நிறத்திலும் அணிந்து வழிபாடு நடத்துவது நல்ல பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீரும், நினைத்தது நடக்கும், நீண்ட ஆயுள் கூடும், உடல் ஆரோக்கியம் பெறும் என்று நம்பப்படுகிறது.

வாங்க வேண்டிய மங்களப் பொருள்
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரை அலங்காரம் செய்ய வேண்டும். பாரம்பரியமிக்க ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட பின்னை மர கொப்பை (கிளை) கிருஷ்ணரின் சிலைக்கு பின்புறம் வைத்து வழிபாடு நடத்துவது வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
பின்னை மர கொப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. சின்ன பசு மற்றும் கன்று வாங்கிக்கோங்க. ஏனெனில் கிருஷ்ணரை சுற்றி பசு மாடுகள் தான் இருக்கும். எனவே, கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று ஏதேனும் மங்களப் பொருள் வாங்க வேண்டுமென்றால், பசு மாடும், கன்றுக்குட்டி பொம்மை வாங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே, இது தங்களின் வீட்டில் இருக்கிறது என்பவர்கள், கற்கண்டு அல்லது வெல்லம் அல்லது வெண்ணை, கிருஷ்ணருக்கு பிடித்த பின்னை மரம் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




