கோவை: சுடுகாட்டு மண் சட்டியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய துவங்கி உள்ளனர்.
அதன்படி கோவையில் வேட்புமனு தாக்கல் துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கோவையில் அலுவலகங்கள் தயார்…
வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஒருசில வேட்பாளர்கள் நூதன முறையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வார்கள். நூதன முறையில் வருபவர்களும் 100 மீட்டர் முன்பு தடுத்து நிறுத்தப்படுவர்.
இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் சுடுகாட்டில் இருந்து மண்சட்டியை எடுத்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா? விஜய் மீது நடிகை புகார்!
அனைவரும் நியாயமாக வாக்களிக்க வேண்டும் வாழும் பொழுது நாம் என்ன செய்திருந்தாலும் இறுதியாக வந்து சேர்வது சுடுகாட்டிற்கு தான் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இவ்வாறு நூதன முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

