கோவை: பீளமேட்டில் வாலிபரை மிரட்டி ஜிபே மூலம் ரூ.30,000 வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). இவர் தற்போது பீளமேடு பட்டாளம்மன் கோவில் அருகில் குடியிருந்து வருகிறார். அங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து அவர் வெளியில் நடந்து சென்ற போது வாலிபர் ஒருவர் எதிரே வந்தார். அவர் சுரேஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
Click here to read news அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை மாத்திரைகள்!
அவர் இல்லை என்று கூறியதால் அவரது செல்போனை பறித்து அதிலிருந்து “ஜிபே” மூலம் 30 ஆயிரம் பணத்தை அவரது கணக்கிற்கு மாற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து சுரேஷ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Click here to Read news கோவை ஆழ்துளை கிணறுகள்: தீயணைப்புத்துறைக்கு உத்தரவு
பொதுமக்கள், இதுபோன்ற சம்பவங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து, தனிப்பட்ட பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தனை நாட்களாக கையில் வைத்திருக்கும் பணத்தை வழிப்பறி செய்து வந்த கொள்ளையர்கள், தற்போது துணிகரமாக ஜிபே மூலமும் கொள்ளையில் இறங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

