கோவை: இன்று (10.09.2025) முதல் தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைத்திட இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதன்படி இன்று 10.09.2025 முதல் 10.10.2025 தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்,
1) தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புலவரைபடத்தில் சாலைவசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டுக’ காட்டும் (Sub rule-3) புலவரைபடம் (இ-சேவைமையத்தில் Scan செய்யவேண்டும்)

2) உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் சொத்துவரி செலுத்திய இரசீது நகல்,
3) வாடகைக் கட்டிடம் எனில், உரிமையாளர் சொத்துவரி செலுத்திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம்.
4) உரிய தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் உரிமக் கட்டணம் ரூ.700/- அசல் செலுத்துச் சீட்டு (E-Chalan கணினி மையத்தில் கட்டி இ-சேவை மையத்தில் Scan செய்யவேண்டும்)
5) மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணப் புகைப்படங்கள் – 1. (இ-சேவை மையத்தில் Scan செய்யவேண்டும்.)
6) மனுதாரரின் நகல் நிரந்தர கணக்கு எண் (Pan Card)இ ஆதார் கார்டு, குடும்ப அட்டை / எஸ்மார்ட் கார்டு ஆகியவை வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு நிபந்தனைகள்;
தற்காலிக பட்டாசு கடை தரைத்தளத்தில் அமைந்திருக்க வேண்டும் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது, பட்டாசு கடை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு மருத்துவமனைகள் பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள் திருமண மண்டபங்கள் வணிக வளாகங்கள் திரையரங்குகள் தொழிற்சாலைகள் பொதுமக்கள் பாதை ரயில் பாதை நீர்த்தேக்கங்கள் நிலத்தடி குழாய் வழி தடங்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழித்தடங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள கட்டிடங்கள் டீக்கடைகள் இருக்கக் கூடாது.
அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகள் பேருந்து நிறுத்தம் பேருந்து நிலையங்கள் கடைத்தெருக்கள் மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் அருகில் பட்டாசு கடை அமைக்க கூடாது, பட்டாசு கடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக இரண்டு வழிகள் இருக்க வேண்டும், திருமண மண்டபங்கள் அரங்கங்கள் சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது, பட்டாசு உரிமை கட்டணம் 700 ரூபாயை, https://www.karuvoolam.tn.gov.in/challan என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டுடன் https://tnedistrict.tn.gov.in எனும் இணையதளத்தில் அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
காலக்கிடத்திற்கு பின்னர் வர பெரும் விண்ணப்பங்களும் நிபதனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.