Header Top Ad
Header Top Ad

ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐயிடம் ஒப்படைக்க திட்டம்- ஹேமாமாலினி பேட்டி

கோவை: தவெக கூட்ட நெரிசல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றம் சிபிஐ-யிடம் கொடுக்கத் திட்டம் உள்ளதாக ஹேமாமாலினி தெரிவித்துள்ளார்.

கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை NDA கூட்டணி ஆய்வுக்குழு நேற்று நேரில் சந்தித்தது.

பின்னர் அக்குழுவினர் டெல்லி திரும்பிய போது கோவை விமான நிலையத்தில் அந்த ஆய்வு குழுவின் தலைவர் ஹேமாமாலினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் நாங்கள் செய்த ஆய்வு பற்றி ஏற்கனவே விரிவாக கூறியிருக்கிறோம். எங்களது அறிக்கையை பிரதமரிடமும் பாஜக தலைவர் நட்டாவிடமும் கொடுக்க இருக்கிறோம் உச்சநீதிமன்றம், சிபிஐ யிடமும் வழங்குவதற்கு திட்டம் உள்ளது.

Advertisement

நாங்கள் விசாரித்த வரை சிறிய இடத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யார் எந்த இடத்தில் சென்றாலும் குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்க வேண்டும் கூட்டம் அதிகமாக செல்லும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விஜய் வெளியிட்டுள்ள வீடியோ குறித்தான கேள்விக்கு எனக்கு அது பற்றி தெரியாது என பதில் அளித்தார்.

Recent News