Power Cut Coimbatore: கோவையில் ஆகஸ்ட் 25ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஆகஸ்ட் 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் சில பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பப்பநாயகன் பாளையம் துணை மின் நிலையம்:-
புரானி காலனி, ஆவரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ–இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம்,
சித்தாபுதூர், பழயூர், பி.என்.பாளையம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ண மருத்துவமனை, ராமகிருஷ்ணா கல்யாண மண்டபம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மயிலம்பட்டி துணை மின் நிலையம்:-
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குறுநெல்லி பாளையம் துணை மின் நிலையம்:-
நல்லட்டி பாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி. மற்றும் குறு நெல்லை பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.