Power cut in Coimbatore: கோவையில் ஜூலை 3ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு, ஜூலை 3ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சரவணம்பட்டி துணை மின் நிலையம்:-
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ்,
சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகரம்பாளையம், லட்சுமி நகர், நாசிமுத்து நகர் ஆகிய பகுதிகளிலும், சரவணம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.
செங்கத்துறை துணை மின்நிலையம்
செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் மற்றும் செங்கத்துறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
பராமரிப்பு பணிகள் விரைவில் முடித்து, அறிவிக்கப்பட்ட நேரத்தில்குள் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தவிர்க்க இயலாத காரணத்தால் மின் நிறுத்தம் செய்வது ஒத்திவைக்க நேர்ந்தால் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.