Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவை மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக செப்டம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சரவணம்பட்டி துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி. புதூர்,

மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட் பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.

அதேபோல், செங்கத்துறை துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேற்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

Recent News