LIK – லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முதல் நாள் வசூல்.. தெறிக்க விடும் PR!

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக களமிறங்கிய 4வது படமான LIK வசூல் வேட்டையில் அபாரம் காட்டியுள்ளது.

இயக்குநராக பிரதீப் ரங்கநாதன், கோமாளி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தானே இயக்கி நடித்த லவ்டுடே அவரை வேற லெவல் ரேஞ்சுக்கு கொண்டு சென்றது.

ஹீரோ அந்தஸ்தை கெட்டியாக பிடித்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து டிராகன், ட்யூம் படம் சூப்பர் ஹிட் ஆனது. 3 படமும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதால் கோலிவுட்டே அவரை கொண்டாடி வருகிறது.

Pradeep

இந்த நிலையில் தோல்வியில் இருந்த விக்னேஷ் சிவன் இயக்கிய படம் lik. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகிய படம் நேற்று வெளியானது. படம் முன் கூட்டியே வெளியாக இருந்த போது பல தடைகளை தாண்டி நேற்று வெளியானது. பாடல்கள் பயங்கர ஹிட் அடித்த நிலையில், இந்த படம் பிஆரின் 4வது படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

Love inusran

ஆனால் சையின்ஸ் ஃபிக்சனுடன் காதலை சொல்லியிருப்பதால் படம் ஏகோபித்த வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளன.

குறிப்பாக எஸ்ஜே சூர்யா வந்த காட்சிகள் தான் ஹைலைட்டாக உள்ளன என்றும், 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்பது சந்தேகம்தான் என்ற தகவல் உலா வருகின்றன.

2040ல் நடக்கும் கதை போல அமைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் இந்த படம் எடுபடுமா என்பது போக போகத்தான் தெரியும். ஆனால் முதல் நாள் வசூலில் lik பிரம்மாண்டம் காட்டியுள்ளது.

PR

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாகிய முதல்நாளிலேயே கணிசமான வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. திரைப்பட வருவாய் கணக்குகளை வெளியிடும் Sacnilk தளத்தின் தகவலின்படி, இந்தியா முழுவதும் சுமார் 3,202 காட்சிகளில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே ரூ.7.93 கோடி வசூலை பெற்றுள்ளது.

இதனுடன் சேர்த்து, வெளிநாடுகளில் மட்டும் இப்படம் ரூ.2 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதனால், உலகளவில் இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ.9.93 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வசூல் கணக்குகள், 2026ஆம் ஆண்டில் அதிக ஓப்பனிங் பெற்ற படங்களின் வரிசையில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தையும் சேர்த்துள்ளன.

Clim

மேலும், தொடர்ந்து வரும் விடுமுறை நாட்கள் காரணமாக திரையரங்குகளில் பார்வையாளர்கள் திரளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இப்படத்தின் வசூல் வருங்கால நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video